166
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் பணிப்பின் பெயரில் நாட்டில் நடை முறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்பு வழங்குதல் தொடர்பாகவும், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (10) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் மேற்பார்வை குழுவின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதற்கான பொறுப்பு அதிகாரி மெஜர் மொகான் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் , திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதம செயளாலர் உற்பட பலரும் கலந்து கொண்டனர்.
அதன் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்பு திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள 1830 பேருக்கான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான மேலதிக தகமைகளை வலுப்படுத்தல் தொடர்பாக வருகை தந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தகக்து. #வேலைவாய்ப்புக்கள் #கலந்துரையாடல் #மன்னார்
Spread the love