161
ரஸ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக் எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைசசுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது எனவும் தனது மகளுக்கு குறித்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மத்தியில் காணொளி மூலம் உரையாற்றிய புட்டின் இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா் #ரஸ்யா #கொரோனா #தடுப்புமருந்து
Spread the love