ஒரு நாள் கனவு -ஓகோ !
அதுவா என மறு நாளும்
என்னை சிந்திக்க வைத்த
அந்த இனிய கனவு.
கண் மூடினால் கனவு வருகுதே
கனவு நிலைத்திடாதோ என பயமும் வருகுதே
கனவோ கல்வியின் இருப்பிடமாய் ஒளிர்ந்தது
அதுவே கல்லறைக்கு சென்று விடுமோ என
பயமும் எழுந்தது.
கனவோ வாழ்க்கை
சமூகம் என மேலும் தொடர
அதுவே இனிமையாய் ஒளிர்ந்தது
நினைக்கவும் சுவையாய் இனித்தது.
கனவில் பாரதி சொன்ன பெண்ணை கண்டேன்
பாலியல் தொல்லை இல்லா சமூகம் கண்டேன்
வீர நடை போடும் வீராப்பை கண்டேன்
இது பொய்யாகிவிடுமோ என
பயமும் கொண்டேன்.
கனவில் தொலைபேசியை தொலைத்துவிட்டேன்
முகநூலை ஒழித்து விட்டேன்
காதில் கேட்டது பறவைகளின் இனிய ஓசை
இயற்கையின் எழில் கண்ணில் குளிர்ந்தது
ஆகா ஓகோ இதுவா அழகு
என எண்ணத் தோன்றியது.
அதர்மம் அழிந்தது
ஆணவம் அடங்கியது
இன்பம் இனிமயாகியது
ஈரலிப்பான சூழல் எங்கும்
எமக்கு கிடைத்த கடவுளின் கொடையோ
என எண்ணத் தோன்றியது
கனவோ அழகிய கனவு!
துரோகம் இல்லா தோழமை கிடைத்தது
வறுமை இல்லா வளமான வாழ்வும் கிடைத்தது
சம உரிமை சமத்துவம் கிடைத்தது
பெண்மை போற்றப்பட்டது
ஆண்மை அன்பாகியது
கனவோ அழகிய கனவு!
சாதி ஒழிந்தது
சமாதானம் பெருகியது
சமத்துவம் கிடைத்தது
கல்வி வாழ்க்கையானது
காதல் பிறந்தது
உறவு உதிர்த்தது
உள்ளம் குளிர்ந்தது
கனவோ அழகிய கனவு!
அரசியல் பொய் பித்தலாட்டம் ஒழிந்தது
அன்பாய் பேசிட நேரங்கள் பெருகியது
ஊழல் ஓடி மறைந்தது
லஞ்சம் ஒழிந்தது
நேர்மை சூரியனாய் உதித்தது
நேசமும் பாசமும் பெருகியது
வறுமை ஒழிந்த விவசாயி
சிறகு முளைத்த பறவையானான்.
சிறப்புடன் அனைவராலும் போற்றப்பட்டான்.
அவனே உயர்ந்த இடத்திலிருந்து
சோறும் போட்டான்- சுதந்திரமாய்
கடன் இன்றி சுற்றியும் திரிந்தான்.
மக்களின் சேவை பெருகியது
மகத்தான மனிதநேயம் உருவாகியது
இயற்கை அழகு கண்ணை பறித்தது
இயற்கை விவசாயம் மருத்துவத்தை கொடுத்தது
மக்கள் நோயின்றி வாழ வழியும் செய்தது
இருபதாம் நூற்றாண்டு மனித வாழ்வு
உதயமானதே என எண்ணிப்பார்த்தேன்
மணியோசை அடித்தது மனது உறக்கம் கலைந்தது
திடீரென்று தொட்டது போல் துடித்து எழுந்தேன்
சூரியன் கண்ணை சுட்டெரித்தான்
விழித்துப் பார்த்து விளக்கம் கொண்டேன்
அது ஒரு கனவு என்று தெரிந்திருந்தும்
உண்மையாகிவிடும் என ஓடிப் போனேன்
மனமோ உடைந்தது
கீழே விழுந்தேன் – முதல்
நீ திருந்து
உலகம் தானாக திருந்தும்
என பாடமும் படித்துக் கொண்டேன்.
வாழுகின்ற காலமெல்லாம்
வீழுகின்றோம் என எண்ணாதே
பயிலுவோம் புது பாடத்தை
மாற்றுவோம் எம் சமூகத்தை
இ.கிருபாகரன்
கிழக்குப் பல்கலைக்கழகம்,