464
வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை காவல்துறையினா் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் பதாகையில் இருந்த புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினார்கள்.
Spread the love