விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நாளை (2020.08.18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளாா்
உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.
.
மும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சாின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது எனவும் இவ்வாறான பிழைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் அமைச்சரினால் கூடுதல் கவனம் எடுக்கப்படும் எனவும் அமைச்சாின் ஊடகப்பிாிவு குறிப்பிட்டுள்ளது #விளையாட்டுத்துறை #மொழி #நாமல்ராஜபக்ஸ #தமிழ் #பிழை