(க.கிஷாந்தன்)
தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நானுஓயாவிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் இன்று ( 18.08.2020) காலை 8.30 மணியளவில் வட்டவளை மற்றும் கலபொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.
குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டி தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று மாலை புகையிரத பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக நாவலப்பிட்டி புகையிரதகட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. #தடைப்பட்டிருந்த #மலையக #புகையிரதசேவை #தடம்புரண்டு