கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்துத்துள்ள அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான கலிப்போர்னியாவில் தற்போது கடுமையான காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது
வடக்கு கலிபோர்னியாவின் வனப் பகுதிகளில் மின்னல் தாக்குதல்களால் பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது எனவும் கடந்த 72 மணி நேரத்தில் 11,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் உ யிாிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோா் தமது வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் மட்டுமன்றறறறி சான் பிரான்ஸிகோவிலும் காட்டுத் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் காட்டுத் தீயினால் இதுவரை 20,234 ஹக்டேயர் பரப்பளவு நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியா கடந்த சில வருடங்களாகவே காட்டுத் தீயினால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் அங்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 84 பேர் உயிாிழந்துள்ளதுடன் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்களும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் நெருப்பில் அழிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #கலிப்போர்னியா #காட்டுத்தீ #கொரோனா #மின்னல்