Home இலங்கையாழில் இளைஞன் மீது வாள் வெட்டு

யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு

by admin

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 


கொழும்புத்துறை பகுதியில் இன்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது 25) எனும் இளைஞனே காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


குறித்த இளைஞன் அவ்வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இளைஞனை வழி மறித்து வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். 
பழைய பகையை தீர்க்கும் முகமாகவே  குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனா். #யாழ் #இளைஞன் #வாள்வெட்டு #கொழும்புத்துறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More