193
கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியின் கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 36 வயதுடைய தந்தையும் அவரது இரண்டு வயதுடைய மகளும் உயிாிழந்துள்ளனா்.
கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து காரொன்றில் மோதியதுடன் பின்னர் மற்றுமொரு காரின் மேற்பகுதியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கலகெதர மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனத் தொிவித்துள்ள கலகெதர காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் #குருநாகல் #விபத்து #தந்தை #மகள்
Spread the love