147
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு வாளால் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (25.08.20) மாலை வரணி, இயற்றாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வேலைக்கு சென்று, மீண்டும் பேருந்தில் பயணித்து சுட்டிபுரம் பகுதியில் இறங்கும் போது அங்கு நின்றிருந்த இனந்தெரியாத குழு ஒன்று குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி கடுமையான காயங்களை ஏற்படுத்தி , தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love