Home இந்தியாமும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் உயிாிழப்பு 16 ஆக அதிகாிப்பு

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் உயிாிழப்பு 16 ஆக அதிகாிப்பு

by admin

மும்பையிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மஹத் என்னும் பகுதியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ப உயிாிழந்டதவா்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகாித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இருவா் உயிாிழப்பு -18 பேர் இடிபாடுகளில்

கனமழையின் காரணமாக மும்பையிலிருந்து 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மஹத் என்னும் பகுதியில் 5 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பலா் உயிாிழந்திருக்கலாம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பழமையான இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 47 வீடுகள் உள்ளதாகவும் இதுவரை இடிபாடுகளில் சிக்கி இருந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளில் 70திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 18 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் எனவும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #அடுக்குமாடி #குடியிருப்பு #உயிாிழப்பு #மும்பை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More