தாய்லாந்தில் சுமாா் பத்து லட்சம் பேரைக் கொண்ட Royalist Marketplace என்னும் குழுவுக்கு முகப்புத்தக நிறுவனம் தடை விதித்துள்ளது. தாய்லாந்தில் முடியாட்சியை விமர்சிப்பது சட்ட விரோதமானது என்னும் சட்டம் காணப்படும் நிலையில் குறித்த குழுவினா் அந்நாட்டின் முடியாட்சி குறித்து விவாதித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாய்லாந்து அரசு இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொிவித்ததனையடுத்து முகப்புத்தக நிறுவனம் இந்த தடையை விதித்துள்ளது.
தாய்லாந்தில் முடியாட்சியில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனக் கோாி அரசுக்கு எதிராக பெரும்திரளான மக்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ள Royalist Marketplace எனும் இந்தக் குழுவை வெளிநாடுகளிலிருந்து அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது #தாய்லாந்து #RoyalistMarketplace #முகப்புத்தகம் #தடை