ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. உடல்நலக் குறைவுக்கு மத்தியில் இன்றையதினம் அவா் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால் அவதியுறும் 65 வயதாகும் அபே,தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர் பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ம் ஆண்டு 2 ஆம் முறையாக ஜப்பான் பிரதமராக பதவி ஏற்ற பின் அபே 2,799 நாட்களை வெற்றிகரமாக பதவிவகித்து சாதனை படைத்துள்ளார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே 2007 ஆம் ஆண்டு உடல் உபாதை காரணமாக தான் வகித்து வந்த பிரதமர் பதவியைத் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜப்பான் #பிரதமர் #பதவிவிலகல்