153
கண்டி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நேற்றிரவு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் கண்டி, அனுரகம பிரதேசத்தின் சில கிராமங்களில் பாரிய சத்தத்துடன் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் நிலநடுக்கம் அல்ல எனத் தொிவித்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சஜ்ஜன டி சில்வா குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணையொன்று இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தொிவித்துள்ளாா். #கண்டி #நிலஅதிர்வு
Spread the love