இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக யுத்தம் அதிகரித்து வந்த நிலையில் யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசாமுனை பகுதியை ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்திவருகின்றனா். ஹமாஸ் அமைப்பினாின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக காசா முனை பகுதியில் இருந்து வெடிக்கக்கூடிய எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்களை இஸ்ரேல் வான்வெளிக்குள் பறக்கவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இவை இஸ்ரேலில் மக்களின் வீடுகளில் விழுந்து தீவிபத்துக்களை ஏற்படுத்தி வந்தன. இந்த தாக்குதல்களால் 300-க்கும் அதிகமான தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல வீடுகள் தீக்கிரையானது. இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அத்துடன் , காசாவில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்கள் மீது ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதனால் காசா பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது.
மேலும், காசா முனைக்கு இஸ்ரேல் வழியாக அனுப்பப்படும் உதவிகளை நிறுத்தியது. காசாவில் உள்ள மின்நிலையத்திற்கு இஸ்ரேலில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் காசா பகுதியில் பெரும் மின்தடை ஏற்பட்டது.
மேலும், எரிபொருள் விநியோகமும் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனியர்கள் காசா பகுதிகளில் இருந்து கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தூரம் குறைக்கப்பட்டது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளால் காசா முனை பகுதியில் பெரும் பிரச்சனைகள் உருவானது.
இதையடுத்து இஸ்ரேலுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள ஹமாஸ் முயற்சி மேற்கொண்டதனையடுத்து இரு தரப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கட்டாா் மத்தியஸ்தம் செய்தது.
காசாவில் இருந்து எரிவாயு பலூன்களை பறக்கவிடுவதையும் ஏவுகணை தாக்குதலையும் நிறுத்தவேண்டும் என இஸ்ரேல் விடுத்த நிபந்தனையை ஹமாஸ் ஏற்கொண்டது.
மேலும்தடைசெய்யப்பட்ட எரிவாயு விநியோகத்தை அனுமதிக்க வேண்டும் என ஹமாஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து 3 வாரங்களாக நடைபெற்றுவந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்த நிறுத்தத்திற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த யுத்தநிறுத்தம் தற்காலிக ஒன்றாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #இஸ்ரேல் #ஹமாஸ்,காசா #போா்நிறுத்தம்