
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தம்பியையா சிவாராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்ட போதும் அவரால் பேரவைக் கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது #யாழ்பல்கலைக்கழகபேரவை #நியமனம் #தம்பியையாசிவராஜா #சுரேன்ராகவன்
Spread the love
Add Comment