
பத்திாிகையாளா் ஜமால் கஷோகி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு அவா்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜமால் கஷோகி அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்த நிலையில் கடந்த 2018 ஒக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற நிலையில் கொல்லப்பட்டிருந்தாா்
சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக தொிவித்த துருக்கி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் துருக்கி தொிவித்தது.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டை பட்டத்து இளவரசர் திட்டவட்டமாக மறுத்த நிலையில் ஜமால் கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கொலையில் நேரடியாக தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனையும், 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் தற்போது ஜமால் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5 போின் மரண தண்டனையை சவுதி அரேபியா உச்சநீதிமன்றம் ரத்து செய்து அவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #ஜமால்கஷோகி #கொலை #மரணதண்டனை #ரத்து #சவுதி #பத்திாிகையாளா்
Add Comment