Home இலங்கை சட்ட உதவி வழங்க தயார்

சட்ட உதவி வழங்க தயார்

by admin

மருத்துவக்கழிவுகளை கிடங்கு வெட்டி புதைப்பதற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடர தீர்மானித்தால் சட்ட உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் என தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.


செம்மணி சிந்துபாத்தி மைதானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்துமயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. 
இந்த மாயனத்தின் பாதுகாப்பு முழுவதும் நல்லூர் பிரதேச சபையினுடையதே அவ்வாறு இருக்க இந்த மயானத்தில் அத்துமீறி நுழைந்து , மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

பிரதேச சபை இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால், அதற்கான சட்ட உதவிகளை இலவசமாக வழங்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார். #சட்டஉதவி #மருத்துவக்கழிவுகள் #மணிவண்ணன் #செம்மணி #இந்துமயானம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More