Home இலங்கைமோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு

by admin

யாழ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

சுண்டுக்குளி குருசர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அட்டூழியம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் காவல்துறையினா் தெரிவித்தனர்.அத்தோடு வீட்டின் வாயில் கதவு வாள்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் யன்னல் கண்ணாடிகளும் அடித்து வீட்டின் உடைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளை இனந்தெரியாத கும்பல் ஒன்று இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டு தப்பித்துள்ளது. சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. #மோட்டார்சைக்கிள் #தீவைப்பு #யாழ் #வன்முறை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More