இலங்கை பிரதான செய்திகள்

யாழ் நகரப்பகுதிக்கு சென்ற மாநகர சபை முதல்வர்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் இன்றைய தினம் யாழ் நகர பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் நகரப்பகுதிக்கு திடீர் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

யாழ் வணிகர் கழகத்தினரின் அழைப்பின் பேரிலேயே யாழ் மாநகர முதல்வர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்பார்வை பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

நகரப்பகுதிகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடர்களை எதிர் நோக்கி வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ் நகரிற்கு சென்றுள்ளார்.

குறித்த பயணதத்தின்போது யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிணை முதல்வர் பார்வையிட்டதோடு மலசலகூட பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததோடு மழைகாலத்தில் ஒழுக்கு ஏற்படுவது தொடர்பில் உடனடியாக அதனை செம்மைப்படுத்துமாறும் உத்தரவிட்ட முதல்வர் மழைகாலத்தில் மின்னஒழுக்கு ஏற்படுவது தொடர்பிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

யாழ்ப்பாண மாநகர முதல்வருடன் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், பொறியியலாளர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினர் குறித்த பயணத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #முதல்வர் #யாழ்ப்பாண #மாநகரசபை #இம்மானுவேல்ஆனல்ட்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.