உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,07,900 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது 24 நேரத்தில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி உலகம் முழுவதும் 3,06,857 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது உலகம் முழுவதும் 2,86,37,952 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிாிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிாிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்ற அதேவேளை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
உலகின் பல முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்ஸ்போர்ட் – ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி, வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியிருந்தநிலையில் பாிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரித்தானியாவின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையகம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #தடுப்பூசி #கொரோனா #உலகசுகாதாரஅமைப்பு #ஒக்ஸ்போர்ட்