இலங்கை பிரதான செய்திகள்

வாளுடன் சிறுவன் – விளக்கமறியல் வைக்க உத்தரவு…மட்டக்களப்பு தலைமையக காவல் பிரின் கீழ் உள்ள உஇருதயபுரம் பகுதியில் வாள்ளுடன் நள்ளிரவில் சென்ற 17 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று (14.09.20) உத்தரவிட்டார்

குறித்த பகுதியில் சம்பவதினதான ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இளைஞர் ஒருவர் வாளுடன் சுற்றிதிரிவதாக காவல்துறை அவசர பிரிவு 119 இலக்கத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து மேற்கொண்ட சோதனையில், 17 வயது சிறுவவனை கைது செய்ததுடன் வாள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட சிறுவனை நேற்று (14.09.20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.