இலங்கையின் தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது, ‘அச்சிடுதல் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஊடக உற்பத்தி’ தொழில்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஜூலை 2020க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீட்டின்படி, ஜூலை 2020க்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு 2019 ஜூலைடன் ஒப்பிடும்போது 2.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 2020 மற்றும் 2019க்கான குறியீடு முறையே 111.1 மற்றும் 108.6 ஆக இருந்தது.
20 உற்பத்திக் கைத்தொழில் துறைகளில 10 துறைகளில் உற்பத்திகளின் உற்பத்தியில் 2019 ஜூலை 10வுடன் ஒப்பிடும்போது சாதகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சிடுதல், மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட ஊடக உற்பத்தி, குளிர் பானங்கள் உற்பத்தி, மற்றும் ஏனைய உற்பத்திகள் முறையே 98.8%, 32.4% மற்றும் 17.4% என குறிப்பிடக்கூடிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது.
உணவு உற்பத்திக் கைத்தொழில் 2019 ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஜுலை மாதம் 13.7% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கைத்தொழில் துறை உற்பத்தியின் 10 கைத்தொழில்களில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மின் உபகரண உற்பத்திகள மற்றும ஆடை உற்பத்திகள் முறையே 40.3ம%, 20.8% மற்றும் 17.2% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தொழில்துறை உற்பத்தி அட்டவணை உட்பட பல பொருளாதார குறிகாட்டிகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை தொகுக்கிறது.
பொருளாதாரத்தின் போக்குகளை அடையாளம் காணவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய துறைகளை அடையாளம் காணவும், பொருளாதார செயல்திறனை மதிப்பீடு செய்யவும் இந்த தகவல்கள் முக்கியமானவை என துறை சுட்டிக்காட்டுகிறது.
“தொழில்துறை உற்பத்தி அட்டவணை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருளாதாரத்தில் தொழிற்துறையின் தன்மையை அடையாளம் காணுவதோடு, தொழிற்துறை துறையில் குறுகிய கால மாற்றங்களையும் அடையாளம் காட்டுகிறது.” #ஊடகஉற்பத்தி #நன்மை #அச்சிடுதல் #தொழிற்துறை #பொருளாதார வளர்ச்சி