தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறைப் பிரிவில் நடத்த விடாது யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை காவற்துறையினர் பெற்றிருந்தனர்.
காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டவரை நேற்று முழுவதும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த காவற்துறையினர் இன்று காலையே யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.