கொழும்பு நகரில் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படுவதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக ஶ்ரீஜயவர்தன புர மாவத்த, பேஸ்லைன், ஹய்லெவல் மற்றும் காலி வீதி ஆகியவற்றை நோக்காக கொண்டு இவ்வாறு வீதி ஒழுங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குச் சட்டத்திற்கு எதிரான 14 குற்றங்களுக்கு இவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ள தண்டப்பணம் பேருந்து , முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை தொடா்பில் விசேடமாக கவனம் செலுத்தப்படும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ட்ரோன் கமரா மற்றும் சிசிரிவி காணொளிகள் மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் வாராந்த நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் கடுமையாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #தண்டப்பணம் #சாரதி #கொழும்பு #வீதிஒழுங்கு