தனது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவதென, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளுக்கு, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தீர்வை முன்வைத்துள்ளார் என தொிவிக்கப்படுகின்றது.
கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் படுதோல்வியை சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஒரேயொரு தேசியப்பட்டியல் மட்டுமே கிடைத்த நிலையில் அதன் மூலம் யாரை நாடாளுமன்றம் அனுப்புவது என சா்ச்சை ஏற்பட்டிருந்தது.
கட்சியின் தலைரவா் ரணில் விக்கிரமசிங்க , பொதுச் செயலாளர் அகிலவிராஜ் அல்லது சட்ட ஆலோசகர்களில் ஒருவரை அனுப்பவேண்டுமென யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேசியப் பட்டியலின் பெயர் பட்டியலில், முதலாவதாக இருப்பவருக்கே சந்தர்ப்பத்தை வழங்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என தொிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின் போது, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கையளித்த தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #ஐதேக #தேசியப்பட்டில் #ரணில் #தீா்வு #ஜோன்அமரதுங்க