கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் நேற்றையதினம் 05 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விபத்தில் ஒன்றரை மாத சிசுவும் அதன் பெற்றோருமாக மூவா் உயிாிழந்திருந்தனா்.
இந்தநிலையில் கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக காவல்துறையினா் இன்றையதினம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #கண்டி #பூவெலிகட #கட்டடம் #அறிக்கை #உரிமையாளா்