178
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 65 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் 12 பேரையும் இன்று (22.09.20) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Spread the love