ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வஜசாரணைக்கு வந்த போதே நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி யினால் இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்டள்ளது
குறித்த நபா் கடந்த 1998 ஆம் ஆண்டு புறக்கோட்டைப்பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. #மரணதண்டனை #ஹெரோயின் #புறக்கோட்டை