பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தலைவா் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி, 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டதனால் அந்த அணியின் தலைவா் விராட் கோலிக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடாில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணி அடுத்து எதிா்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. #விராட்கோலி #அபராதம் #பெங்களூரு #ஐபிஎல்