“கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை மீண்டும் பிாித்தானியாவுக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.
குறித்த கொள்கலன்களில் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் காணப்பட்டமை முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்தது எனவும் அவற்றில் 21 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவற்றை மீளவும் பிாித்தானியாவுக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கழிவுகளுடன் தொடர்புடைய பிாித்தானிய நிறுவனங்களிடம் நட்ட ஈட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.
குறித்த கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் 2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு க கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #கழிவுகள் #கொள்கலன்கள் #பிாித்தானியா #வர்த்தமானி #பிளாஸ்டிக் #பொலித்தீன்