போதைப் பொருள் வழக்கு விசாரணையின்போது ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் கைபேசிகளை பறிமுதல் செய்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகின்ற நிலையில் இந்த விசாரணை தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்ய்யப்பட்டு தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிவுட் பிரபலங்கள் வட்ஸ் அப்பில் போதைப் பொருட்கள் குறித்து உரையாடியதாக கைபேசி ஸ்க்ரீன்சொட்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன.
அதனடிப்படையில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோருக்கு என்சிபி அழைப்பாபணை அனுப்பியிருந்ததனைத் தொடா்ந்து நேற்று முன் தினம் (25.09.20) ரகுல் ப்ரீத் சிங்கும் நேற்று (26.09.20) தீபிகா, சாரா, ஷ்ரத்தா உள்ளிட்டோரும் என்சிபி அதிகாரிகள் முன் முன்னிலையாகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையின்போது நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா ஆகியோரிடமிருந்து ஆதாரங்களுக்காக அவா்களது கைபேசிகளைப் பறிமுதல் செய்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களது கைபேசிககளில் இருந்துதான் அவர்கள் போதைப் பொருட்கள் குறித்து உரையாடியதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #ரகுல்ப்ரீத்சிங் #தீபிகாபடுகோன் #கைபேசிகள் #போதைப்பொருள் #சுஷாந்த்சிங்