அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ள நிலையில் அங்கு புதிதாக மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது.
அதாவது மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் குழாய் நீரில் இருப்பதாக நகர் குடிநீர் விநியோக துறை எச்சரித்து உள்ளது.
மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ’நைல்கிரீய பெளல்ரி’ குடிநீர் விநியோக அமைப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதனையடுத்து டெக்சாஸ் மாகாணத்தின் லேக் ஜேக்ஸன் பகுதி மக்கள் குழாய் தண்ணீர் பயன்படுத்துவது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற நோய் தொற்றுகள் அரிதாகவே அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாகவும் 2009 – 2018 இடையிலான பத்தாண்டு காலகட்டத்தில் 34 பேருக்கு மட்டுமே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
கழிவறைக்கு மட்டுமே இந்த நீரை பயன்படுத்துமாறும் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்றும் கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னா் இந்த எச்சரிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும் 27 ஆயிரம் பேர் வசிக்கின்ற, லேக் ஜேக்சன் பகுதியில் மட்டும் இந்த எச்சரிக்கை நீட்டிக்கிறது.
தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறும் குளிக்கும் போது தண்ணீர் மூளைக்குள் போகாதப்படி பார்த்து கொள்ளுமாறும் அதிகாாிகள் அறிவுறுத்தியுள்ளனா். #மூளை #நுண்ணுயிர்கள் #குழாய்நீர் #கொரோனா #அமெரிக்கா