Home இலங்கை கினிகத்தேனையில் வான் விபத்து – 13 பேர் காயம்

கினிகத்தேனையில் வான் விபத்து – 13 பேர் காயம்

by admin

(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வான் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை காவல்துறையினா் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே குறித்த வான் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வானில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனசும் தொிவித்துள்ள காவல்துறையினா் இவர்களில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் மரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கினிகத்தேனை காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. #கினிகத்தேனை #வான் #விபத்து #காயம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More