இலங்கை பிரதான செய்திகள்

சித்தன்கேணியில் வீடு புகுந்து கொள்ளை

வட்டுக்கோட்டை வடக்கு, சித்தன்கேணியில் வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் வீடு புகுந்து 10 பவுண் நகைகள் மற்றும் 9 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது என வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

“வீட்டில் உள்ளவர்கள் நேற்று கோயிலுக்கு சென்ற போது, வீட்டுக் கதவின் திறப்பை வீட்டின் முன்னுக்குள்ள சுவாமித்தட்டில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.


கோயிலிருந்து மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 பவுண் தங்க நகைகளும் 9 ஆயிரம்ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #சித்தன்கேணி #கொள்ளை #நகை #பணம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.