Home பிரதான செய்திகள் ஐபிஎல் – டெல்லி முதலிடத்தில்

ஐபிஎல் – டெல்லி முதலிடத்தில்

by admin

டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 19 வது லீக் போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 59 ஓட்ட வித்தியாசத்தில் வென்று ள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 197 ஓட்டங்கள் வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்ததினால் டெல்லி அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்றுள்ளன. #ஐபிஎல் #நாணயச்சுழற்சி #பெங்களூரு #டெல்லி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More