இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவல் காரணமாக கம்பஹா உள்ளிட்ட 12 காவல்துறை பிரிவுகளுக்கு மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல், நோய்க்கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தின் கீழேயே இவ்வாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, கம்பஹா,கிரிந்திவெல, தொம்பே, பூகொட,கணேமுல்ல, வீரகுல,வெலிவேரிய, மல்வத்துஹிரிப்பிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவல, யக்கல உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை ஏற்கனவே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள திவுலபிட்டிய, மினுவங்கொடை,வெயங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் மீள்அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற கூடாதெனவும் அப்பகுதிகளுக்குள் உட்புகுவதற்கும் வெளியேறுவதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளூடாக பயணிக்கும் பேருந்துகளிலிருந்து பயணிகளை இறக்கவோ ஏற்றிச் செல்லவோ முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #ஊரடங்கு #கொரோனா #தனிமைப்படுத்தல்