இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தொிவித்துள்ளாா்.
கொரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளமையினால் உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் முடக்கலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.
இந்தநிலையில் சுமார் 9 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான பாிசோதனைகள் இறுதி கட்ட நிலையில் உள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா , ரஸ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஸ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற தடுப்பு மருந்து முன்னிலையில் உள்ளது என தொிவிக்கப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலையிலேயே இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் தொிவித்துள்ளாா். #WHO #கொரோனா #தடுப்புமருந்து #உலகசுகாதாரஅமைப்பு