184
இலங்கையின்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2 ஆவது நாளாக இன்று (12) முன்னிலையாகியுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகி இருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் பெரும்பாலானோரின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல விமர்சனங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love