பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அந்நாட்டிற்கு அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக செயற்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hayleys Free Zone தனியார் நிறுவனம், ETL Colombo தனியார் நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், இலங்கை முதலீட்டு சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சட்ட மா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் கழிவுப்பொருட்கள் அடங்கிய இந்த கொள்கலன்களை இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டமைக்கெதிராக, சுற்றாடல் பாதுகாப்பு கேந்திர நிலையம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #இலங்கை #கழிவுப்பொருட்கள் #கொள்கலன்கள் #சுற்றாடல்அதிகாரசபை