Home இலங்கை பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

by admin

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குறித்த தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கு தொடா்பிலேயே இன்று புதன்கிழமை இவ்வாறு தீா்பபு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

இத்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடா்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

இன்று வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த தீர்ப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் எடுக்கும் முடிவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. #பிரித்தானியா #விடுதலைப்புலிகள் #தடை #நாடுகடந்ததமிழீழஅரசாங்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More