இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. 


யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் காலை நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.


கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்தியஅமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். #யாழ்போதனாவைத்தியசாலை #படுகொலை #நினைவேந்தல் #இந்தியஇராணுவம்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap