ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை கற்பிக்கும் தனியாா் கல்விக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஷியா முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் டாஷ் இ பார்ச்சி என்னும் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தற்கொலைக் குண்டு தாக்குதாரி அந்த கல்வி கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் எனவும் அவரை பாதுகாவலா் ஒருவா் அடையாளம் கண்டதும் குண்டு வெடித்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
அதேவேளை இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. #ஆப்கானிஸ்தான் #தற்கொலைத்தாக்குதல் #ஐஎஸ் #ஷியா