141
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார், தனது 60ஆவது வயதில் இன்று (01.11.20) திடீரென உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 12.30 மணி வரைக்கும் களுவாஞ்சிகுடி பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த அவர், பாண்டிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், திடீர் சுகயீனம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அதிகாலை 03 மணியளவில் உயிரிழந்துள்ளார். சடலம், கல்முனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த வைத்திய அதிகாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
Spread the love