137
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் குருநாகல் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதெனவும் அவா் தெரிவித்துள்ளார். #தனிமைப்படுத்தல் #ஊரடங்குச்சட்டம் #கொரோனா #மேல்மாகாணம்
Spread the love