இலங்கையில் மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவர் வெலிசறை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா…
இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 35 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 169 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7582 ஆக அதிகரித்துள்ளது.