யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்று ( புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்குகடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCRபரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளைதிறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. #யாழ்நகரில் #மூடப்பட்டிருந்த #நவீனசந்தைக்கட்டடத்தொகுதி #கொரோனா