
மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட, மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகருக்கு அருகில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த 09 பிள்ளைகளின் தந்தையான ஆனந்தராசா விஜயானந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தச்சுத்தொழிலாளியான குறித்த நபர் மல்லாவி , கொள்ளவிலாங்குளம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்று விட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொடிகாமத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
அதன் போது மாங்குளம் – மல்லாவி வீதியில் மாங்குளம் சந்திக்கு அருகில் இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீதியில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனை அடுத்து யானை மோட்டார் சைக்கிளையும் அதனை ஒட்டி வந்த நபரையும் தூக்கி வீசி தாக்கியுள்ளது, அதன் போது யானையின் தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். #யானை #குடும்பஸ்தர் #பலி #மாங்குளம்
Add Comment