சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர், வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சமூகத்திற்குள் அதிகளவு தொற்று பரவியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவா் தமக்கு PCR பரிசோதனை தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது எனவும் PCR பரிசோதனைகள் மேற்கொள்வதில் காணப்படும் பற்றாக்குறை முதலாவது பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பரிசோதனையின் எண்ணிக்கையை ஜீபிஎஸ் ஊடாக அதிகரிக்க முடியும் என தாங்கள் நம்புவதாகவும்அவ்வாறு இல்லாவிடின் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண முடியாது போகும் எனவும் அவா் குறிப்பட்டுள்ளாா்.
தாங்கள் இதனை ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்ற போதிலும் அது இன்னமும் இடம்பெறவில்லை எனவும் இதுதொா்பில் நேற்றைய தினமும் தாங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவா் தொிவித்துள்ளா்ா.
இதனை தொடர்ந்தும் முன்னெடுக்காவிடின் தொழில்நுட்ப முறையை பின்பற்றக்கூடிய நடைமுறையை இவர்கள் எதிர்காலத்தில் தொடர்வார்களா என்பது தெரியவில்லை என்பதனால் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு செயற்பாடுகளில் பங்கேற்பதை நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என அவா் தொிவித்துள்ளா்ா.
ஜீபிஎஸ்ஸை செயற்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை இந்த வாரத்திற்குள் முன்வைக்காவிடின் நாங்கள் உறுதியான தீர்மானத்தை எட்ட வேண்டி ஏற்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர், வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார். #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #தொழில்நுட்பகுழு #சுகாதாரஅமைச்சு #PCR