இலங்கையில் 30வது கொரோனா 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன இன்று தொிவித்துள்ளார்.
கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (05) குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாா் எனவும் நீரிழிவுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டமையே அவரது உயிாிழப்புக்கு காரணம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை